பசுவந்தனை அருகே வேகத்தடையில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள குமார ரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயபாலன் (31), விவசாயி. இவர் நேற்று மாலை குதிரைகுளம் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்: சி.நாகராஜ்
No comments:
Post a Comment