தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.
தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி நகர் பகுதிகளில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 1, ஸ்ரீவைகுண்டம் 1, சாத்தான்குளம் 6.6, கோவில்பட்டி 7, எட்டயபுரம் 14.90, சூரங்குடி 6 என மொத்தம் 43.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment