குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 14 October 2024

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெற்றது. இதையொட்டி போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் கடற்கரையில் நடந்தது. இதை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர். 

தொடர்ந்து வேடமணிந்து வந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 6 மணியளவில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணியளவில் அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு களையப்பட்டது. பின்னர் வேடமணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

12-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன்
திருவிழா நிறைவு பெற்றது. இவ்விழா
காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு
ஏற்பாடுடன் வெகு விமர்சியாக நடைபெற்று
முடிந்த நிலையில் பொதுமக்கள் மற்றும்
பக்தர்கள் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு
செல்ல தூத்துக்குடி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் தலைமையில் 4000
காவல்துறையினர் போக்குவரத்து சீரமைப்பு
மற்றும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து
ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad