போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது : மான் கொம்பு பறிமுதல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது : மான் கொம்பு பறிமுதல்

போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது : மான் கொம்பு பறிமுதல்

கோவில்பட்டியில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்து, மான் கொம்பால் குத்த முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மந்திதோப்பு இந்திரா காலனி பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் வசித்துவரும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூக்கையா மகன் அலெக்ஸ் பாண்டியன் (32) போலீசாரை அவதூறாகப் பேசி பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், கையில் வைத்திருந்த மான் கொம்பால் குத்த முயன்றாராம்.

சுதாரித்துக்கொண்ட போலீசார், அலெக்ஸ் பாண்டியனை மான் கொம்புடன் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, மான் கொம்பைப் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad