செய்துங்கநல்லூர் போலீசார் சோதனை சாவடியில் குலசைக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தை மரித்து வாகனத்தில் சாதியை வெளிப்படுத்தும் விதமான கொடிகள் கயிறுகள் உடைகள் அணிந்தவர்கள் இருந்தால் அவைகளை உடனே அகற்ற போலீசார் அறிவுறுத்தினர்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து குலசை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது நான்கு இளைஞர்கள் சாதியை வெளிப்படுத்தும் உடைகள் அணிந்திருந்தனர். உடனே எஸ்ஐ ஈஸ்வரமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஜெகன், ராஜேஷ் ஆகியோர் வேறு உடையை மாற்றினால் மட்டுமே வாகனத்தை அனுப்ப முடியும் என அறிவுறுத்தி வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் மாற்று உடை அணிந்த பின்பு வாகனம் செல்ல அனுமதித்தனர்.
இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் எஸ் ஐ ஈஸ்வரமூர்த்தி கூறுகையில். நீங்கள் சாமி கும்பிட பக்தி வெறியோடு செல்ல வேண்டும். அந்த புனித ஸ்தலத்துக்கு ஜாதி வெறியோடு செல்லக்கூடாது.அங்கு சென்று ஜாதி ரீதியிலான பாடல்கள், ஆடல்கள், உடைகள் மற்றும் கொடிகளை வைத்துக்கொண்டு இருந்தால் அது உங்களுக்கு நல்லதல்ல உங்கள் நன்மைக்காக தான் கூறுகின்றோம். அரசு மற்றும் போலீசார் போலீசார் சாதியை வெளிக்காட்டும் உடைகள், கொடிகள் கயிறுகள் போன்றவற்றை அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கெத்து காட்டுவதற்கான இடம் கோயில்கள் அல்ல
என வரும் பக்தர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்
No comments:
Post a Comment