தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் தாலந்துகளை தனிநபர் போட்டிகளாக ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, சிறுகதைப்போட்டி, தனிநபர் நாடகம், பேச்சுபோட்டி, பஜனை, குழுப்பாடல், குழுநடனம் என எட்டு பிரிவுகளில் முப்பந்தைத்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட சபைகளிலிருந்தும் திருமண்டல அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி கல்லூரிகளின், மாற்றுத் திறனாளிகள் என மாணவ மாணவியர் திறன் காண் போட்டிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று வெளிப்படுத்தினர்.
குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஜெபித்து துவங்கி வைத்தார். இறைமக்கள் செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உயர்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்டக், திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ், துணை தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு போட்டியாளர்களை ஊக்கப் படுத்தினர்.
திருநெல்வேலி திருமண்டல குருமார்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மதீப்பிட்டாளர்களாக பங்கு பெற்றனர். திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ் மதியம் போட்டிகளை ஜெபித்து துவங்கி வைத்தார், துணை தலைவர் தமிழ்ச்செல்வன் போட்டிகளைஜெபித்து ஆசி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன் திறன்காண் போட்டி குழு குருவானவர்களும், சிறப்புற செய்திருந்தனர்.
No comments:
Post a Comment