தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் ராஜ்குமார் (69) என்பவர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார். இந்த ஷோரூமில் RTO அலுவலக வாகன பதிவு சம்பந்தமாக பணிபுரிந்து வந்த தூத்துக்குடி எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் குருராஜ் (37) என்பவர் ஒவ்வொரு நாளும் நிறுவன கணக்காளரிடமிருந்து பணம் பெற்று அதை ஷோரூம் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தி பின்னர் RTO அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி வரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் குருராஜ் என்பவர் மேற்படி ஷோரூம் நிறுவனத்தில் பெற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் மொத்தம் ரூபாய் 40,00,000/- பணம் மோசடி செய்ததாக மேற்படி இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I போலீசார் வழக்குபதிவு செய்து குருராஜை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர் அவர்கள் நேற்று (11.10.2024) வழக்கின் குற்றவாளியான குருராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
No comments:
Post a Comment