வெள்ளநீர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 October 2024

வெள்ளநீர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!

வெள்ளநீர் கால்வாய் பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி கால்வாய் மற்றும் வெள்ளநீர் செல்லக்கூடிய பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அடுத்துள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளநீர் செல்லக்கூடிய ஐந்தாவது மடை மற்றும் பெரியநாயகிபுரம் ஆபிரகாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது ஒட்டப்பிடாரம் மணியாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இருந்து வரக்கூடிய வெள்ள நீர் செல்லக்கூடிய கால்வாய்களையும் பார்வையிட்டு அதில் உள்ள அடைப்புகளை எடுத்து விடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் வெள்ளனீர் செல்லும் கால்வாய்களில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார் இதுபோல் வெள்ளம் ஏற்பட்டு கோரம்பள்ளம்குளம் முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பாகவே திறந்து விடுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக்கொண்டார்.‌

ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை அலுவலர் அஜய் சீனிவாசன் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் எஸ் ஆர்.ஆனந்த சேகரன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad