விலையில்லா சைக்கிள் உடன்குடி ஒன்றிய குழுதலைவர் பாலசிங் வழங்கினார்.
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், திமுக பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி வழிகாட்டுதலின்படி உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளை பிஷப் அசர்யா நினைவு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூ தலைமை வகித்தார். முதுநிலை ஆங்கில ஆசிரியை சாந்தினி ராஜமேரி சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக உடன்குடி யூனியன் சேர்மன் டிபி பாலசிங் பங்கேற்று சிறப்புரையாற்றி 83 மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான், சுப்புலட்சுமி, வெள்ளாளன்விளை பஞ்சாயத்து துணை தலைவர் கணபதி, மாவட்டதிமுக நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளர் சுடலை கண்ணு, கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், முதுகலை தமிழ் ஆசிரியர் ரெக்ஸ் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment