தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்தில் உள்ள 14 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான கபாடி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் தூத்துக்குடி திரேஸ்புரம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி, நடுநாலுமூலைக்கிணறு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி மோதின.
இதில் நடுநாலுமூலைக்கிணறு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 42 - 30 பெற்று மாவட்ட அளவிலான சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இதில் முக்கியமாக நடுநாலுமூலைக்கிணறு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கபடியின் மீது உள்ள ஆர்வத்தினாலும், தன்னம்பிக்கை விடாமுயற்சியினாலும் உள்ளூர் கபடி அணி வீரர்கள் கவியரசன்,இதயராஜ், டேவிட்,தமிழழகன், காளிமுத்து,சந்ரு, செல்வகுமார் ஆகியோரின் தீவிர பயிற்சியினாலும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி மாவட்ட அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஊர் மக்கள், பள்ளி ஆசிரியர்கள், வவுனியா கபடி அணி வீரர்கள் பாராட்டினர்.
பட்டம் வென்ற நடுநாலுமூலைகிணறு பள்ளி மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க உள்ளனர்
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தி யாளர்.
No comments:
Post a Comment