மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 81 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன் ராணி வழங்கினார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுத்தலின் படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி, உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரத்தில் உள்ள அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜான் ஸ்டீபன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திமுக மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஜெசி பொன்ராணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் 81 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் அல்பர்ட் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment