அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் கட்சியினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர அதிமுக சார்பில், எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. சண்முகநாதன் ஆலோசனைப்படி அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் முன்னிலையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர்கள் சுரேஷ் பாபு, டாக்டர் என். சுரேஷ், பழக்கடை திருப்பதி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் கோட்டை மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா நேரு, நகர துணைச் செயலாளர் சுந்தர், நகர அதிமுக பொருளாளர் வள்ளிராஜ், நிர்வாகி டிபிஎஸ் சுயம்பு, மகளிர் அணி சுகிர்தா, ரம்யா நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment