விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நலத்திட்ட பணிகள் திறப்பு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 October 2024

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நலத்திட்ட பணிகள் திறப்பு விழா.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.36.77 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் இன்று(17.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவஞானபுரத்தில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தினையும், இனாம் சுப்பிரமணியபுரத்தில் ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடத்தினையும், பிள்ளையார்நத்தத்தில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும் மற்றும் மார்த்தாண்டம்பட்டியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும் என மொத்தம் 4 இடங்களில் ரூ.36.77 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad