இதனை சரிசெய்யுமாறு மின்துறை அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூக வலை தளத்தின் வாயிலாலவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் இதுவரை மின்துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் மெளனம் காத்து வருகின்றதா கூறப்படுகின்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டமையால் வரும் மழைகாலங்களில் இந்த சேதமடைந்ந மின்கம்பம் சாய்ந்து அதன்மூலம் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக மின்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இன்று மாலை 5:30 மணியளவில் 13 வார்டு கவுன்சிலர் எனது(திருமதி. உச்சிமாகாளி ராமகிருஷ்ணன்) தலைமையில் பொதுமக்கள் அந்த மின்கம்பத்திற்கு சிவப்பு துணி கட்டி பொட்டு வைத்து பூவைத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment