மூன்று மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 89 கிலோவிற்கு மேற்பட்ட எடைபிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் பதினோராம் வகுப்பு சி பிரிவு மாணவர் தருண் முருகன் மூன்றாமிடமும், 89 கிலோ எடைபிரிவில் 11 ஆம் வகுப்பு அ பிரிவு மாணவர் பிரதீப் குமார் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பளு தூக்குதல் போட்டியில் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்வதும் வெற்றி பெறுவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பரிசுத்தொகையாக இருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் வீரர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர் மற்றும் தனபால் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன் மற்றும் கபடி பயிற்சியாளர் தீபன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment