நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (40), இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சன்னதி புதுக்குடி கிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருந்தது. இதுகுறித்து அவர் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, பைக்கை திருடிய தென்காசி மாவட்டம் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக் (29), நெல்லை மாவட்டம் ராஜ வள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் முத்துக்குமார் (43), துறையூரைச் சேர்ந்த அபிமன்யூ மகன் ரகு (29) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் குருசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment