தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் திருட்டு - வாலிபர் கைது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 September 2024

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் திருட்டு - வாலிபர் கைது

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம், மேட்டு பிராஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் வைத்தியநாதன் (35), லாரி டிரைவர். இவர் கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அருகில் ஒரு லாரி செட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். 

இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் இரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் கடலாடி பகுதியை சேர்ந்த உமய பாண்டியன் மகன் பார்த்திபன் (27) என்பவரை கைது செய்து, அவர் திருடிய செல்போனையும் பறிமுதல் செய்தார். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad