செப்.22, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி 4வது வார்டு நாடார் தெரு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர். இதையடுத்து வார்டு கவுன்சிலர் தினேஷ் கிருஷ்ணா ஏற்பாட்டில் நகராட்சி நிதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் ,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, நகர்மன்ற 4 வது வார்டு உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணா, 2வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், சோலார் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment