திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சி விளையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சி விளையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்.

திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சி விளையில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

செப்.23, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சிவிளை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நிதியிலிருந்து 29.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


இந்த விழாவில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ.பி.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்றோ, இப்ராகிம் சுல்தான், பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் ரஞ்சித் குமார், வார்டு உறுப்பினர் ஜெபராஜ், ஒப்பந்ததாரர் அருள்ராஜ் டைட்டல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad