செப்.23, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கோயிலில் பக்தர்களின் வசதிக்காக தஞ்சை தொழிலதிபர் டி எஸ் நடராஜன் பேட்டரி காரை வழங்கியுள்ளார். இந்த பேட்டரி கார் சேவை தொடக்க விழா திங்கட்கிழமை நடந்தது. விழாவில் மீன் வளம் ,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் தஞ்சை தொழிலதிபர் விஎஸ் நடராஜன், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேசன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், திமுக இளைஞரணி முத்துக்குமார், கோவில் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் ஜெயகபிரகாஷ், சிராஜுதீன் ,குலசை நூலகர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment