செப்.23, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாத கொடை விழா திங்கட்கிழமை தொடங்கியது. மாலை 6:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாரதனையும், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் 9.30 மணிக்கு பெண்கள் மஞ்சள் பெட்டி ஊர் சுற்றிஆலயம் வருதல், தொடர்ந்து அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை கும்பம்தெரு வீதி உலா ,மாலை 6 மணிக்கு கரகாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8:30 மணிக்கு வான வேடிக்கையுடன், செண்டை மேளம் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. புதன்கிழமை மதியம்1மணிக்கு அம்மனுக்கு உச்சிகால பூஜை, 2 மணிக்கு பட கஞ்சி பூஜை நடக்கிறது. விழாவையொட்டி 2 நாட்களும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் ராஜதுரை , செயலாளர் சீனிவாசன் , பொருளாளர் பட்டுராஜன் , துணைச் செயலாளர் தங்கராஜ், துணைப் பொருளாளர் சேர்ம துரை மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment