கோவில்பட்டி - வாலிபர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

கோவில்பட்டி - வாலிபர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை.

கோவில்பட்டி அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பது மகன் பாண்டியராஜ் (25). இவர் கட்டிட தொழில் செய்துள்ளார். இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பாண்டிராஜ் உடலை கைப்பற்றி உனக்கு ஒரு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத காரணமாக அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அவரது கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad