தூத்துக்குடியில் வருகின்ற 28ம்தேதி சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது - கலெக்டர் இளம்பகவத் தகவல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 September 2024

தூத்துக்குடியில் வருகின்ற 28ம்தேதி சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது - கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடியில் வருகின்ற 28ம்தேதி சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது - கலெக்டர் இளம்பகவத் தகவல் 

தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் வருகின்ற 28ஆம்தேதி நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 28.09.2024 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவிகளுக்கு 15 கி.மீ. மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவிகளுக்கு 5 கி.மீ. எனவும் நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-மும். இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-மும். மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-மும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.250/-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட

போட்டிக்கான விதிமுறைகள்

இந்தியாவில் தயாராகும் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும்.

உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில்

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழுடன் 28.09.2024அன்று காலை 6 மணிக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருகை தர வேண்டும்.

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டாங்கம் வந்தடையும்.

போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும்

பங்குபெறும் வீரர், வீராங்கனைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-மும். இரண்டாமிடம்,

பெறுபவர்களுக்கு ரூ.3000/-மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-மும் நான்காமிடம்,

முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ 1000/-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad