திருச்செந்தூர் பி. ஜி. மருத்துவமனை மற்றும் பி. ஜி. நரம்பியல் மையம், பி. ஜி.மகப்பேறு பிரிவு மற்றும் திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில் நாசரேத் ரயில் நிலையம் அருகே உள்ள சாலமோன் மெட்ரிக் பள்ளியில் வலிப்பு நோய், பக்க வாதம், நரம்பியல் கோளாறுகள், நரம்பியல் மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மகப்பேறு, மகளிர் நலன், இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவுக்கு சாலமோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி முன்னாள் ௨றுப்பினர் ஏடிகே. ஜெயசீலன் முகாமை தொடங்கி வைத்து ௨ரையாற்றினார். டாக்டர். கார்மேகராஜ், இருதய மருத்துவர் பிரசாத், அருணா கார்டியாக் கேர் ஒருங்கிணைப்பாளர் ராமன், ஆகியோர் ௨ரையாற்றினர்.
மூளை நரம்பியல் மற்றும் நரம்பியல் மறுவாழ்வு சிறப்பு மருத்துவர் டாக்டர் குகன் ராமமூர்த்தி, மகப்பேறு மற்றும் மகளிர் நலன் சிறப்பு மருத்துவர் டாக்டர் மலர்விழி குகன், பொது நல மருத்துவர்கள் டாக்டர் அருண், டாக்டர் லட்சுமி நாராயணன், இருதய நலன் சிறப்பு மருத்துவர் பிரசாத் ஆகியோர் பங்கேற்று நரம்பியல் நோய் , நரம்பியல் மறுவாழ்வு, மகப்பேறு மற்றும் மகளிர் நலன், இருதய பாதிப்பு ஆகியவை குறித்து பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்ககினர்.
இந்த முகாமில், மூளை மின் வரைபடம்(இஇஜி) , நரம்பு மற்றும் தசை பரிசோதனை (என்.சி.எஸ்), சர்க்கரை அளவு, மகளிருக்கு கருப்பை வாய் பரிசோதனை,அல்ட்ரா சவுண்ட், ஈசிஜி ௨ள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இயன்முறை மருத்துவர்கள் டாக்டர் சுபாஷ் முத்துக்குமார், டாக்டர் சண்முகப்பிரியா ஆகியோர் இயன்முறை சிகிச்சை அளித்தனர். நரம்பியல் பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் குகன் ராமமூர்த்தி விளக்கமளித்தார்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் மருந்து,மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.முகாம் ஏற்பாடுகளை பி. ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் அ. ராமமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
No comments:
Post a Comment