ஆழ்வார்திருநகரி செப் 9. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 8 வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஆகஸ்ட் 30 ந்தேதி கொடி ஏற்றம் நடந்தது.
செப். 3 ந்தேதி 5-ம் திருவிழாவும் நடந்தது. நேற்று 10 நாள் தேரோட்டம் நடைபெற்றது. விடியற்காலை 4.00 மணிக்கு விஸ்வரூபம். 5.00 மணிக்கு திருமஞ்சனம். 6.00 மணிக்கு நித்தியல். உற்சவர் வைத்தமாநிதி தேருக்கு 7.30 எழுந்தருளினார்.
8.15 மணிக்கு தேர் வடம் பிடித்து கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேரை இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு. பாலாஜி. சீனிவாசன். ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை திருவேங்கடாச்சாரி ஸ்வாமி. ஸ்ரீதரன் ஸ்வாமி. சடகோபன் ஸ்வாமி ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜன் ஸ்வாமி. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன். கிரிதரன். ராமலட்சுமி. செந்தில் குமார். காளிமுத்து. நிர்வாக அலுவலர் சதீஷ். ஆய்வாளர் லோகநாயகி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஊர்த் தலைவர் கிருஷ்ணன். முன்னாள் கவுன்சிலர் நாக மணி.உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் இளநிலை மின் பொறியாளர் விஜய் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment