தூத்துக்குடி மாவட்டம், செப்.08, திருச்செந்தூரில் பால கோகுலம் சார்பில் 31 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று செப்.07 மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பாலகோகுலம் சார்பில் திருச்செந்தூர் வடக்குமாடவீதியில் உள்ள காசி விநாயகர் ஆலயத்திலிருந்து நூற்றுக்கணக்கான விநாயகர் திருமேனி சிலைகளை குழந்தைகள் கையில் ஏந்தியவாறு 4 உள்மாடவீதிகளிலும்,4 ரதவீதிகளிலும் ஊர்வலம் வந்தனர்.
அதனை தொடர்ந்து விநாயகருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலகோகுலம் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். சேவாபாரதி அமைப்பாளர் இராஜமாதங்கன் வரவேற்புரையாற்றினார். இந்து முன்னணி ஒன்றிய செயலர் ராஜேந்திரன் ஜீ விநாயகர் பூஜையும், காசி – கிட்டு தம்பதியர் விநாயகர் சீர்பாதம் மற்றும் பூஜையும் செய்தனர்.
சேவா பாரதி இணை அமைப்பாளர் சுப சத்தியமூர்த்தி விநாயகர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சரவணய்யர் நடுநிலைப்பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம், அஞ்சல் முகவர் லட்சுமணன், பாலகோகுலம் செயலாளர் திருமலைக்குமார், சாது சதானந்த குருகுல மாணவன் பாலாஜி, பொறியாளர்கள் பாலாஜி,
ஹரிஹரசுப்பிரமணியன், பாஜக நிர்வாகி லிங்கம் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செல்லம்மாள் இறைவணக்கம் பாடினார். ரெங்கநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் பாலகோகுலம் துணைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பாலகோகுலம் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
No comments:
Post a Comment