தருவைகுளம் அருகே மீன் ஏல கூடத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 September 2024

தருவைகுளம் அருகே மீன் ஏல கூடத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செப்.07, தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மிக்கேல் இவரது படகில் காரைக்குடியை சேர்ந்த முருகேசன் மக்ன ஆனந்த் (33) என்பவர் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஆனந்த் நேற்று தருவைகுளம் மீன் ஏல கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 


இது தொடர்பாக தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாதேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் மணல் மேல்குடி கிராமத்தைச் சேர்ந்த கந்தையா மகன் ரகுபதி (38), என்பவரும், கொலை செய்யப்பட்ட ஆனந்தும் தூத்துக்குடியில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். 


நேற்று முன்தினம் மாலை இருவரும் மது போதையில் இருந்த போது ரகுபதி தாயாரை ஆனந்த் அவ மரியாதையாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி, அவரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் ரகுபதியை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad