கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவல்துறையினரின் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 September 2024

கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவல்துறையினரின் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை.

தூத்துக்குடி மாவட்டம் :07.09.2024, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் இன்று (07.09.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவல்துறையினரின் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
 

இப்பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் கலவர கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும், கலவரம் நடக்கும்போது காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் அதற்கான வழி முறைகளையும் காவலர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கம் அளித்தார். மேலும் பணியின் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
 
இந்த பயிற்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad