உடன்குடியில் ஐடியல் இறகுபந்து கழகம் சார்பில் வட்டார அளவிலானஇறகுபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

உடன்குடியில் ஐடியல் இறகுபந்து கழகம் சார்பில் வட்டார அளவிலானஇறகுபந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு.


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செயல்பட்டு வரும் ஐடியல் இறகு பந்து கழகம் சார்பில் வட்டார அளவிலான நான்மெடலிஸ்ட் இறகு பந்து போட்டி நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த போட்டியில், மகளிர் பிரிவில் 60க்கு மேற்பட்ட அணிகளும், ஆண்கள் பிரிவில் 80க்கும் மேற்பட்ட அணிகளும் கலந்து கொண்டன.

பள்ளி மாணவர்களுக்கு யு 13,யு15,யு17 ஆகிய பிரிவுகளிலும், பொதுபிரிவில் 2 ஆகவும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 

போட்டிகளை சிவமுருகஆதித்தன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று மாலை இறுதி போட்டிகள் நடைபெற்றது. பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதற்கு ஞானராஜ் கோயில் பிள்ளை தலைமை வகித்தார். அருள்ராஜா வரவேற்றார். 

சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் கயல் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2வது பரிசாக ரூ.4ஆயிரம், அரையிறுதியில் தோற்ற அணிகளுக்கு ரூ.1500 வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் உடன்குடி ஒன்றிய கவுன்சிலர் முருங்கை டி. மகாராஜா, திமுக மாவட்ட பிரதிநிதி எஸ் ஆர் எப். ஜெயபிரகாஷ் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார்.


போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஐடியல் இறகு பந்து கழக தலைவர் ஆமோஸ்ராஜா, செயலாளர் ஜெயகணேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad