ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மந்திரகுரு (25), இவர் மோட்டார் பைக்கில் முக்காணி அருகே சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற ஒரு கார் இவரது பைக் மீது மோதியதில் அதே இடத்தில் மகேந்திர குரு பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் காளிதாஸ் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்


ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad