தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 September 2024

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பூபால ராயபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ரகுராஜ் (44), மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பூ மார்க்கெட் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஒருவர் திருட முயன்றுள்ளார். இதையடுத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

போலீஸ் விசாரணையில், அவர் தருவைகுளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஜெயராம் மகன் ஜெயசீலன் (38) என்பதும் பல்வேறு பகுதிகளில் பைக்கை திருடியதும் தெரியவந்தது. அவர் தெர்மல் நகர் காதர் மீரான் நகரைச் சேர்ந்த சங்கரப்பன் (60) என்பவர் வஉசி மார்க்கெட் அருகே நிறுத்தியிருந்த பைக்கையும், கீழ அழகாபுரியைச் சேர்ந்த சித்திரவேல் மகன் முத்து வேல்ராஜ் (53) என்பவர் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கையும் திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 2 பைக், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad