அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 September 2024

அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு.

அய்யனடைப்பு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அய்யனடைப்பு பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கிராமங்களான கைலாசபுரம், சண்முகபுரம், பொன்னகரம், இந்திரா நகர், சோரீஸ்புரம், உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அய்யனடைப்பு பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது அவ்வாறு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இல்லாமல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி, உள்ளிட்ட வரிகளும் உயர வாய்ப்புள்ளது அங்கு வசிக்கும் பொது மக்கள் ஏராளமானோர் விவசாயக் கூலி தொழிலாளர்கள் எனவே மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad