ஷேர் மார்க்கெட்டில் நிதியிழப்பு: ராணுவ வீரர் விஷம் குடித்து தற்காெலை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 September 2024

ஷேர் மார்க்கெட்டில் நிதியிழப்பு: ராணுவ வீரர் விஷம் குடித்து தற்காெலை!

கழுகுமலையில், ஷேர் மார்க்கெட் முதலீட்டில் பணத்தை இழந்ததால் முன்னாள் ராணு வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சிவசுப்பிரமணியன் (49). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சிவசுப்பிரமணியன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.20 லட்சம் பணத்தை முதலீடு செய்தாராம். இதில் அவருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. 

பணத்தை இழந்ததால் மன வேதனை அடைந்த சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad