செப்.15, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா, பத்மபூஷன் விருது கௌரவிக்கும் விழா மற்றும் தேமுதிகவின் 20வது ஆண்டு தொடக்க விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் உடன்குடி மெயின் பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் தலைமை வைத்தார்.
உடன்குடி ஒன்றிய செயலாளர் பழரசம் சங்கர் முன்னிலை வைத்தார். ஒன்றிய அவைத் தலைவர் உத்திரம் வரவேற்று பேசினார். கலை இலக்கிய அணி செயலாளர் ராஜ்மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரகாச வினோக், உடன்குடி அவைத் தலைவர் உலகநாதன், மாவட்ட இளைஞரணி இசக்கி முத்து, தலைமை கழக பேச்சாளர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், உதயகுமார், சண்முக வேலாயுதம், ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார் ,சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் சியாமளவன்னன், கருணாகரன்,மாயாண்டி மோசஸ், பிரேனத், நிர்வாகிகள் ஆழ்வார் ,தேவி முருகன், முத்துப்பாண்டி, இளைஞர் அணி இசக்கிமுத்து, அரவிந்த், முத்துராமன், பத்மநாபன், மகளிர் அணி பேச்சியம்மாள், சாந்தி ,கலைச்செல்வி, ஜெயலட்சுமி, வலைதள அணி ஸ்ரீகாந், செல்வகுமார், விஜயபாஸ்கர், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் பேச்சிமுத்து, ஏரல் நகர செயலாளர் முத்துக்குமார், காயல் நகர பொருளாளர் நாராயணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உடன்குடி நகர செயலாளர் காதர் முகைதீன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment