உடன்குடி புனித வளனார் ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை கெபி ஆண்டு திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 September 2024

உடன்குடி புனித வளனார் ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை கெபி ஆண்டு திருவிழா.

உடன்குடி புனித வளனார் ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை கெபி ஆண்டு திருவிழா அருட்தந்தை ஜான் பிரிட்டோ சிறப்பு ஆராதனை வழங்கினார். 

செப்.15, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புனித வளனார் ஆலயத்தில் ஆரோக்கிய அன்னை கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 6 ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து தினமும் காலை நவநாள் திருப்பலியும் , மாலையில் ஜெபம் ஜெபமாலை ஆராதனையும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் திருவிழா வான நேற்று மாலை ஆரோக்கிய அன்னை சப்ர பவனி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை ஆராதனை நடைபெற்றது. தூத்துக்குடி அருட்தந்தை ஜான் பிரிட்டோ சிறப்பு மாலை ஆராதனையை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள் லியோன், வில்லியம் பங்குத்தந்தை பன்னீர்செல்வம், ஊர் இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad