பசுவந்தனை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள சரவணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் வீரசூரன் (70) இவர் மோட்டார் சைக்கிளில் சில்லாங்குளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த கன்னக்கட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் மூர்த்தி (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment