திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 September 2024

திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்

திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை -  தூத்துக்குடியில் பரிதாபம்!

செப்.12, தூத்துக்குடியில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவரது மகள் முருகேஸ்வரி (27), பி.காம் பட்டதாரியான இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிற 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்ததாம். இதற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவரது தந்தை செல்லையா கஷ்டப்பட்டு வந்ததாராம். இதனால் மன வேதனையடைந்த முருகேஸ்வரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad