எட்டையாபுரத்தில் கோவில்பட்டி பாரதியார் அறக்கட்டளை, பாட்டுக்கூடம் சார்பில் மகாகவி பாரதியார் விழா நடந்தது.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய மகாகவி பாரதியின் 103வது நினைவு தின விழா எட்டயபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. பட்டுக்கூடம் பாட்டு பயிற்சி பள்ளி மாணவர்கள் பாரதியார் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பாரதியின் பாடல்களை பாடி அசத்தினர்.
அவரது பிறந்த இல்லத்திலும் பாரதியின் பாடல்களை பாடினர். மாணவர்கள் அனைவருக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்து செல்வம், பாட்டுக்கூடம் நிறுவனர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகாரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியின் பாடல்களை பாடிய மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். இதில் பாரதி ஆய்வாளர் பொன் பரமானந்தம்,உள்பட பாட்டுக் கூடம் பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment