குறிப்பன்குளம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவாரணத் தொகை - பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 September 2024

குறிப்பன்குளம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவாரணத் தொகை - பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

செப்.12, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், ஆழ்வார்திருநகரி குறுவட்டம், குறிப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் 31.08.2024 அன்று மாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 

இன்று(12.09.2024), தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில், மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்களுடன் சென்று வெடிவிபத்தில் உயிரிழந்த நாசரேத் பகுதியில் உள்ள மணிநகரைச் சேர்ந்த விஜய் என்பவரது குடும்பத்தினருக்கும், அழகியமணவாளபுரம் பகுதியில் உள்ள செம்பூரைச் சேர்ந்த ஐசக் பிரசாத் என்பவரது குடும்பத்தினருக்கும், 

திருவைகுண்டம் வட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த நாராயணபெருமாள் என்பவரது குடும்பத்தினருக்கும், அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் என்பவரது குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகைகளுக்கான காசோலைகளையும், மேலும், இவ்விபத்தில் காயமடைந்த உடையார்குளம் பகுதியில் உள்ள சின்னமதிக்கூடலைச் சேர்ந்த செந்தூர்கனி மற்றும் முத்துமாரி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் நிவாரணத் தொகைகளுக்கான காசோலைகளையும் 


மற்றும் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த ஏரல் வட்டம் அழகியமணவாளபுரம் பகுதியில் உள்ள செம்பூரைச் சேர்ந்த வீரமுத்து மதன் என்பவரது குடும்பத்தினருக்கும் ரூ.4 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், அவர்களுடன் நேரில் சென்று வழங்கி, உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின்போது, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி.செ.அமிர்தராஜ், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் பொ.சாரதா பொன் இசக்கி, வட்டாட்சியர்கள் கோபால் (ஏரல்), ரத்னா சங்கர் (திருவைகுண்டம்), ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad