நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 September 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பசுமை சார்ந்த பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டுவித்தார். பள்ளியின் கிழக்குப்புற வளாகத்தை பசுமையாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்கெனவே, பள்ளியில் மூலிகை தோட்டம் சிறப்பாக பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஜென்னிங்ஸ் காமராஜ் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மரம் நடும் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad