ஸ்ரீவைகுண்டத்தில் மகளிர் காவலர் தின கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 September 2024

ஸ்ரீவைகுண்டத்தில் மகளிர் காவலர் தின கொண்டாட்டம்.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரசுவாமிகள் தொடக்கப்பள்ளியில் 
மகளிர் காவலர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் துணை ஆய்வாளர் முத்து மாரி அவர்களுக்கு பள்ளி ஆசிரியைகள் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

பெண் காவலர்களின் பணி பெருமை மிகுந்தது, அனைத்து பெண் காவலர்களும் போற்றப்பட வேண்டியவர்கள், அவர்கள் பணி சிறக்க ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து கூறினார்கள்.

ஆசிரியர்கள் சார்பாக பெண் காவலர்களுக்கு கவிதை வாசித்தனர்.
பின்னர் பேசிய துணை ஆய்வாளர், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல், என்ற திருக்குறளை கூறி அனைவரும் இந்த வள்ளுவன் வாக்கிற்கிணங்க வாழ வேண்டும்.

பெற்றோர்களை மதிக்க வேண்டும், நன்றாக விளையாட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad