தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 September 2024

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி!

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் யாக்கோப் மகன் ஞானதுரை (46), இவர் மோட்டார் பைக்கில் சாமிநத்தம் கிராமத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவு ரோட்டில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad