கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியை வழிமறித்து தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறார்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி (40). இவர் கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, புளியங்குளம் பிரதான சாலையில் உள்ள நூற்பாலை அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேர், மாடசாமியை தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசி, ரொக்க பணம் ரூ.2,800, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 13, 17, 15 வயதுடைய இளஞ்சிறார்கள் 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போன், தங்கச் சங்கிலி மற்றும் அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment