திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தூய்மை பணி.
அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தியையொட்டி திருச்செந்தூர் நகராட்சி சார்பாக "தூய்மையே சேவை என்னும் தலைப்பில் திருச்செந்தூர் ரயில்நிலையத்தில் இன்று தூய்மைப்பணி நடந்தது.
நகராட்சி ஆணையாளர் கண்மணி அறிவுரையின்படி, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வழிகாட்டுதலில், திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் கவிதா, சத்தியலெட்சுமி.
திருச்செந்தூர் ரயில்வே பாதுகாப்பு படை புற காவல் நிலைய அதிகாரி முத்துலட்சுமி, தூய்மை மேற்பார்வையாளர் தமிழரசி ஆகியோர் மேற்பார்வையில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் ரயில் நிலையத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "மஞ்சப்பை " வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மூலம் தூய்மை பணியை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment