பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் கருட சேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 September 2024

பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் கருட சேவை.

ஏரல் செப். 30. தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6 வது பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் கருட சேவை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மாதம் 2 வது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு விஸ்வரூபம் 5.15 மணிக்கு திருமஞ்சனம். 6 மணிக்கு நித்தியல். பின்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம். மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு உற்சவர் மாயக்கூத்தர் கருட மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

8.30 மணிக்கு சுவாமி மாயக்கூத்தப் பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மாட வீதி புறப்பாடு நடந்தது. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன் பிச்சைமணி ஸ்தலத்தார்கள் சீனிவாசன். ராமானுஜம். ஸ்ரீதர். ஸ்ரீகாரியம் அஸ்வின். அரவிந்த் 

நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் தக்கார் சிவலோநாயகி கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad