அடைக்கலாபுரம் அற்புத நகரில் உள்ள அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் அற்புத நகரில் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை ஜெபமாலை பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8.10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் சேரன்மகாதேவி அருட்தந்தை பிரான்சிஸ் பங்கேற்று மறையுறை நிகழ்த்தினார். விழாவில் திருத்தல பங்கு தந்தை லாசர் மற்றும் அருட் சகோதரிகள், திருவிழா பணி குழுவினர், பங்கு மேய்ப்பு பணிகுழுவினர், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் மதியம் 12 மணிக்கு ,மாலை 3 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை நடைபெறுகிறது.
மேலும் காலை 5 மணிக்கு ஜெபமாலை பவனி, நவநாள் திருப்பலி, மாலை 6:30 மணிக்கு மறையுறை நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழா நாட்களில் தினமும் மாலை திவ்ய நற்கருணை ஆசீருகு முன்பும் பின்பும் ஒப்புரவு அருட் சாதனம் வழங்கப்படுகிறது.
1 நாள் முதல் ஏழாம் நாள் திருவிழா வரை மறையுறையில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.9 வது நாள் திருவிழாவான வரும் 6ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. உடன்குடி பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமை வைத்து நடத்துகிறார்.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி நடைபெறுகிறது மாலை 6 .30மணிக்கு நற்கருணை பவனியும் ,இரவு 9:30 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறும். வரும் 8ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பின் அசன விருந்து நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை லாசர் மற்றும் திருவிழா பணி குழுவினர் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment