ஸ்ரீவைகுண்டம். செப். 30.நவதிருப்பதி களில் மூன்றாம் திருப்பதியான திருப்புளிங்குடடியில் புரட்டாசி மாத 2 வது சனிக்கிழமைய முன்னிட்டு நேற்று முன்தினம் கருடசேவை நடந்தது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 5.30 மணிக்கு திருமஞ்சனம். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவை. 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் 9.45 மணிக்கு ஸ்வாமி காய்சினி வேந்தப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மாடவீதி புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கோபாலகிருஷ்ணன் சௌந்ததரராஜன் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன். தேவராஜன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன்.
நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி திவ்யபிரபந்தகாரர்கள் சீனிவாசன் ராமகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment