ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் முற்றுகை போராட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் முற்றுகை போராட்டம்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்.

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னா், அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து துறை அலுவலக வேலைகளையும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளா்கள் மீது சுமத்துவதை தவிா்க்க வேண்டும். 

ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணி செய்ய நிா்பந்திக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தக்கூடாது.

ஊராட்சி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாளா்களை பணிக்கு அழைத்து சிரமப்படுத்தக்கூடாது. முதல்வரின் காலை உணவு திட்டம் சம்பந்தமான பதிவேடுகளை சத்துணவு துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இதையடுத்து கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினா். ஆயினும் தற்போதைய நிலவரப்படி மதியம் ஒரு மணி ஆகியும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad