பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 September 2024

பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்.

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் நாராயணன் (48). தனியார் ஷிப்பிங் கம்பெனியில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 12 மணி அளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டீச்சர்ஸ் காலனி ரோட்டில் சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad