தூத்துக்குடி நகரை பசுமையாக்கும் வகையில், 20ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நகரத்தை பசுமையான நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் 20ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி இ.பி காலனியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment